< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தாவில் வங்காளதேச துணை தூதரகம் நோக்கி இந்து அமைப்பினர் பேரணி
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் வங்காளதேச துணை தூதரகம் நோக்கி இந்து அமைப்பினர் பேரணி

தினத்தந்தி
|
29 Nov 2024 10:24 AM IST

சின்மய் கிருண்ண தாஸ் கைது மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொல்கத்தா:

வங்காளதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்தபின்னர் இந்துக்களுக்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

அண்மையில் தேசத்துரோக வழக்கில் இந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிருண்ண தாஸ் கைது மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவிலும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்து அமைப்பின் தலைவர் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகம் நோக்கி பாங்கிய பங்கிய இந்து ஜாகரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சீல்டா ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு தூதரகம் நோக்கி சென்றனர். அவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போராட்டக்காரர்கள், சிறிது நேரம் கண்டன முழக்கம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்