< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் கனமழை; தட்சிண கன்னடாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை; தட்சிண கன்னடாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை

தினத்தந்தி
|
30 July 2024 11:44 PM IST

கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்ட சூழலில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தட்சிண கன்னடா,

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) ஒரு நாள், அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் அறிவித்து உள்ளது.

இதேபோன்று, மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

ஏதேனும் இயற்கை பேரிடர் அல்லது அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், மக்கள் அதுபற்றி உடனடியாக தொடர்புடைய பஞ்சாயத்து அல்லது நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அவசரகால சேவைகள் மற்றும் நிவாரண குழுவினர், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

மேலும் செய்திகள்