< Back
தேசிய செய்திகள்
கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்
தேசிய செய்திகள்

கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்

தினத்தந்தி
|
22 March 2025 10:03 PM IST

கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாங்கள் வானிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சரியான தகவல்களை அவ்வப்போது வெளியிடுவோம்.

அதனால், உங்களுடைய பயண திட்டங்களை சரி செய்து கொள்ளுங்கள். திரும்பவும் டிக்கெட் முன்பதிவு செய்ய நேரிடும். அல்லது எங்களுடைய இணையதளம் வழியே கட்டண தொகையை திரும்ப பெறுவதற்காக விண்ணப்பியுங்கள் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, வானிலை மாற்றம் எதிரொலியாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனமும் தெரிவித்து உள்ளது. அதனால், பயணிகள் அனைவரும் விமான நிலையம் வருவதற்கு முன்பு, விமானத்தின் நிலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. பெங்களூருவில், பரபரப்பான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. இதனால், விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்