< Back
தேசிய செய்திகள்
கடும் பனிமூட்டம்; நாடு முழுவதும் 26 ரெயில்கள் தாமதமாக இயக்கம்
தேசிய செய்திகள்

கடும் பனிமூட்டம்; நாடு முழுவதும் 26 ரெயில்கள் தாமதமாக இயக்கம்

தினத்தந்தி
|
15 Jan 2025 10:42 AM IST

கடும் பனிமூட்டம் காரணமாக குறைந்த தெரிவுநிலை காரணமாக மொத்தம் 26 ரெயில்கள் தாமதமாகி வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

புது டெல்லி,

தேசிய தலைநகரை குளிர் அலைகள் சூழ்ந்துள்ளதால், மூடுபனி காரணமாக விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வட இந்தியாவில் குளிர்கால குளிர் தீவிரமடைவதால் வீடற்ற நபர்கள் தேசிய தலைநகரில் இரவு தங்குமிடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல நாட்களாக, மோசமான மூடுபனி காரணமாக, ரெயில்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல ரெயில்கள் கால அட்டவணையில் குறிப்பிடத்தக்க அளவில் ரெயில்கள்தாமதமாக இயக்கப்படுகின்றன.

பீகார் எஸ் கிராந்தி (12565) , ஸ்ரீ ராம் சக்தி எக்ஸ்பிரஸ் (12561) , கோரக்தாம் எக்ஸ்பிரஸ் (12555) மற்றும் என்டிஎல்எஸ் ஹம்சாபர் (12275) என முக்கியமான ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதையடுத்து மகாபோதி எக்ஸ்பிரஸ் (12397) , அயோத்தி எக்ஸ்பிரஸ் (14205) மற்றும் எல்கேஓ என்டிஎல்எஸ் ஏசி எக்ஸ்பிரஸ் (14209) உள்ளிட 26 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்