வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
|அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள், பிரதமர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் , அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.
நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் பாடுபடுவோம் என பதிவிட்டுள்ளார்.