< Back
தேசிய செய்திகள்
குஜராத்: பழைய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
தேசிய செய்திகள்

குஜராத்: பழைய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து

தினத்தந்தி
|
26 Nov 2024 4:39 PM IST

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத்தின் காந்திநகரில் உள்ள பழைய தலைமை செயலக கட்டிடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி மகேஷ் மோத் கூறுகையில், காந்திநகரில் உள்ள பழைய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் பெயரில் நாங்கள் இங்கு வந்தோம். சற்று புகை மூட்டமாக இருந்ததால், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. நாங்கள் இங்குள்ள அலுவலகத்தின் சன்னல் கண்ணாடிகளை உடைக்க வேண்டியிருந்தது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்