< Back
தேசிய செய்திகள்
குஜராத்:  ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்ணை மீட்க தொடர்ந்து முயற்சி
தேசிய செய்திகள்

குஜராத்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்ணை மீட்க தொடர்ந்து முயற்சி

தினத்தந்தி
|
7 Jan 2025 8:32 AM IST

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 வயது பெண்ணை மீட்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கச்,

குஜராத்தில் கச் மாவட்டத்தில் கந்திராய் கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் 18 வயது பெண் ஒருவர் விழுந்து விட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், இந்திய ராணுவ, தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

அந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுகிற பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ராஜஸ்தானின் கீரத்பூர் கிராமத்தில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த சிறுமி 9 நாட்கள் நடந்த சவாலான மீட்பு பணிகளுக்கு பின்னர் மீட்கப்பட்டாள்.

எனினும், சிறுமியின் உடல்நலம் பாதிப்படைந்து உயிரிழந்து விட்டாள். இதேபோன்று மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் 10 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். மீட்பு பணி முடிவில் அவனை காப்பாற்றியும் அதில் பலனின்றி அவன் உயிரிழந்து விட்டான்.

மேலும் செய்திகள்