நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி
|நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1.82 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுவுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் அதிகம் என்றும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டியதன் மூலம் இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.34,141 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.43,047 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.91,828 கோடியாகவும், செஸ் ரூ.13,253 கோடியாகவும் இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.5 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வருவாயாகும்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியும், கடந்த அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் விழாக் காலம் என்பதால் பொருள்களுக்கான தேவை உயர்ந்து, ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் சற்று குறைந்திருந்தாலும், 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் 2-வது சிறந்த ஜி.எஸ்.டி. வசூலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.