< Back
தேசிய செய்திகள்
சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது - அமித்ஷா
தேசிய செய்திகள்

சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது - அமித்ஷா

தினத்தந்தி
|
10 March 2025 7:32 PM IST

ஸ்ரீராமர், அனுமனுக்கு நாடு முழுவதும் கோவில்கள் கட்டி அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமிஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின்போது நான் பீகார் சென்றபோது ராமர் கோவில் கட்டப்பட்டதாக கூறினேன். இப்போது சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது. இந்த கோவில் முழு உலகிற்கும் பெண் சக்தியின் செய்தியையும், வாழ்க்கை வரலாறு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் இருக்கும். குஜராத்தில் குடியேறிய மிதிலாஞ்சல் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள் அதன் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்கள் மாநிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் இருக்கின்றனர் என்றார்.

ஸ்ரீராமர், அனுமனுக்கு நாடு முழுவதும் கோவில்கள் கட்டி அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று சீதா தேவிக்கும், கோவில்கள் கட்டி அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவிலும் சீதா தேவிக்கு, கோவில் உள்ளது. கோலார், முல்பாகல் தாலுகா ஆவனி கிராமத்தில், ஆவனி மலையில், சீதாம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ராமாயண காலத்தில் லவ - குசா என்ற இரட்டை குழந்தைகளை, ஆவனி மலையில் தான் சீதா பெற்றெடுத்தார் என்று வரலாறுகள் கூறுகிறது. லவ - குசா வளர்ந்ததும் தனது தந்தை ஸ்ரீராமருடன், இதே கிராமத்தில் வைத்து, போர் புரிந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.ராமாயண காவியத்தை எழுதிய வால்மீகியும், சிறிது காலம் ஆவனி, கிராமத்தில் வசித்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆவனி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க, பல கோவில்கள் உள்ளன. இதில் முக்கிய கோவிலாக, சீதா தேவி கோவில் உள்ளது.

மேலும் செய்திகள்