< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமித்ஷா உடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
|24 Dec 2024 8:40 PM IST
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்
புதுடெல்லி,
4 நாட்கள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக கவர்னர் ஆர் என் ரவி டெல்லி சென்றார். இந்த நிலையில், இன்று காலை டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார்.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார் .தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு தொடர்பா அமித் ஷா உடன் கவர்னர் ஆர்.என். ரவி விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. .