< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு

15 Feb 2025 9:51 PM IST
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போகிறது. உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்ப வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்க வேண்டும். புதிதாக கொண்டு வரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.
சில பிரச்சினைகளுக்கு பெரிய தொழில்நுட்ப தலையீடுகள் தேவையில்லை. தொழில்முனைவோர் இதனை புரிந்து கொண்டு பாரம்பரிய சமூகங்களின் அறிவை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்."
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.