< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
|20 July 2024 9:59 PM IST
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இருந்து முரதாபாத் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயிலில் மொத்தம் 7 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அம்ரோஹி என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்த ரெயில்வே பணியாளர்கள், விரைந்து வந்து ரெயிலின் பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.