< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு

தினத்தந்தி
|
13 Nov 2024 10:00 AM IST

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இரும்பு தாது ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில், நேற்று இரவு ராகவபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு மத்திய ரெயில்வேயின் அறிக்கையின்படி, அகோலா மற்றும் அகோட்டில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது. சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.

பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது. மேலும் சில ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு:-






மேலும் செய்திகள்