"இந்தியாவிற்கு நல்ல காலம் வர இருக்கிறது" - ராகுல்காந்தி பேச்சு
|பா.ஜ.க.வின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும் என ராகுல்காந்தி பேசினார்.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. கடைசி கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது;
பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும். பாஜகவிற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது. "ஜூன் 4க்குப் பிறகு பாஜக, நரேந்திர மோடிக்கு குட்பை. பாஜகவிடம் இருந்து நாடு விடுதலை பெறும். இந்தியாவிற்கு நல்ல காலம் வர இருக்கிறது.
தேர்தலுக்கு பின்பு ஊழல் தொடர்பாக மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் என்று கூறி அவர் தப்பித்து விடுவார்" பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா? உண்மையில் பிரதமர் ஏழைகளுக்கு உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அம்பானி மற்றும் அதானிக்காக வேலை செய்கிறார்." என்று பேசினார். பிரசாரத்தின்போது வெப்ப அலையை தாங்க முடியாமல் ராகுல்காந்தி தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.