< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
|20 Nov 2024 2:42 AM IST
பெண் ஒருவர், மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாகாலாவை பகுதியில் வசித்து வருபவர் காந்தம்மா (வயது 75). இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை பணிப்பெண் தனது வேலைகளை முடித்து விட்டு வெளியே சென்றதும் அடையாளம் தெரியாத மர்மபெண் ஒருவர் முகமூடி அணிந்து காந்தம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது தான் வைத்திருந்த மிளகாய் பொடியை காந்தம்மாவின் கண்களில் தூவி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மர்மபெண் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாகாலா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காந்தம்மாவிடம் விசாரணை நடத்தினர்.