< Back
தேசிய செய்திகள்
ஜெர்மனி அதிபர் இந்தியா வருகை
தேசிய செய்திகள்

ஜெர்மனி அதிபர் இந்தியா வருகை

தினத்தந்தி
|
25 Oct 2024 5:50 AM IST

ஜெர்மனி அதிபர் இந்தியா வந்துள்ளார்.

டெல்லி,

3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த அதிபர் ஓலாப்பை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

அதிபர் ஓலாப் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்