< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை
|2 Oct 2024 10:07 AM IST
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது
புதுடெல்லி,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.