< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ககன்யான் 5-வது கட்ட இன்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்
|7 Sept 2024 2:58 AM IST
ககன்யான் திட்டத்தின் 5-வது கட்ட இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSDM) என்ற இன்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக கண்டனர்.