< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் லாரி மீது வேன் மோதியதில் 4 பெண்கள் பலி
தேசிய செய்திகள்

குஜராத்தில் லாரி மீது வேன் மோதியதில் 4 பெண்கள் பலி

தினத்தந்தி
|
26 Nov 2024 12:05 PM IST

குஜராத்தில் லாரி மீது வேன் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

காந்திநகர்,

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு 10.30 மணியளவில் சோட்டிலா அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஐ.பி.வால்வி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "லிம்ப்டி தாலுகாவில் உள்ள ஷியானி கிராமத்தில் இருந்து சோம்நாத் நோக்கி 20 பயணிகளுடன் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இருந்து வந்த லாரி சாலையோர ஓட்டலில் நிறுத்த வலதுபுறம் திரும்பியது, அது விபத்துக்கு வழிவகுத்தது. விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 16 பேரும் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள், மக்ஜிபென் ரெதாரியா (72), கலால்பென் ரெதாரியா (60), மஞ்சுபென் ரெதாரியா (65) மற்றும் கவுரிபென் ரெதாரியா (68) என அடையாளம் காணப்பட்டனர்" என்றார்.

மேலும் செய்திகள்