< Back
தேசிய செய்திகள்
கடன் தொல்லை; விவசாயி குடும்பத்துடன் தற்கொலை
தேசிய செய்திகள்

கடன் தொல்லை; விவசாயி குடும்பத்துடன் தற்கொலை

தினத்தந்தி
|
28 Dec 2024 2:40 PM IST

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வேளாண்துறை மந்திரி கே.அச்சன்நாயுடு தெரிவித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரிபுரம் மண்டலத்தில் உள்ள தித்தேகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 41). அவர் தனது கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர்கள் வளர்த்து வந்தார். பயிர் வளர்ப்பதற்காக தனியார் நிறுவனத்தில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பயிர்கள் கருகியதால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி செலுத்துமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்தார். இதனால் மனமுடைந்த விவசாயி தனது வயலில் உள்ள மரத்தில் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் விவசாயி நாகேந்திரன், அவரது மனைவி வாணி (38), அவர்களது மகள் காயத்ரி (12) மற்றும் மகன் பார்காவ் (11) என அடையாளம் காணப்பட்டுள்ளன. மகன் மற்றும் மகளை கொன்ற பிறகு, தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிப்பதாக வேளாண்துறை மந்திரி கே.அச்சன்நாயுடு தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்