< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி

தினத்தந்தி
|
17 Feb 2025 2:15 PM IST

கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் சிங்க்ரெவுலி மாவட்டத்தில் உள்ள வைதானில் இருந்து பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நோக்கி சொகுசு காரில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது யாத்ரீகர்களை ஏற்றி சென்ற வாகனத்தை கடக்கும்போது சொகுசு கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சித்தி மாவட்டத்தில் உள்ள அமஹியா காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்