< Back
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் சாலை விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் சாலை விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

தினத்தந்தி
|
8 Jan 2025 4:49 PM IST

ஜார்கண்டில் நடந்த சாலை விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் 3 பள்ளி குழந்தைகள், ஆட்டோ டிரைவர் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பள்ளி குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்