காதலனுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி.. வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த நண்பர்கள்
|காதலன் மற்றும் அவரது நண்பர்களின் பாலியல் துன்புறுத்தலை தாங்க முடியாத மாணவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தனது காதலன் வம்சியுடன் கடந்த ஒரு வருட காலமாக நெருங்கி பழகியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி, வம்சி தன் காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள நண்பர்களின் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
அவர்களின் அந்தரங்க காட்சிகளை நண்பர்கள் மூன்று பேர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு காதலன் வம்சியும் உடந்தையாக இருந்துள்ளார்.
தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த அந்த மாணவி, மனவேதனையில் நேற்று முன்தினம் (நவம்பர் 18) தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை அவரது தந்தை காப்பாற்றி நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறினார்.
அதன்பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான வம்சி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.