< Back
தேசிய செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
26 Dec 2024 9:32 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது 92 வயதாகும் மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்