< Back
தேசிய செய்திகள்
அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

அரியானா முன்னாள் முதல்-மந்திரி மறைவு; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Dec 2024 7:06 PM IST

முன்னாள் முதல்-மந்திரி மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

சண்டிகர்,

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின் மகன்களில் ஒருவர். சவுதாலா ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை அரியானா முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவையொட்டி அரியானாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி டிசம்பர் 20-ந்தேதி(இன்று) முதல் 22-ந்தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21-ந்தேதி(நாளை) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்