< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.
|15 Nov 2024 3:00 PM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் சீமாபுரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 3 முறை வெற்றி பெற்றவர் வீர் சிங் திகன். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான வீர் சிங் திகன் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் வீர் சிங் திகன் அக்கட்சியில் இணைந்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் சீமாபுரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக வீர் சிங் திகன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஆம் ஆத்மியை சேர்ந்த ராஜேந்திர பால் கவுதம் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.