< Back
தேசிய செய்திகள்
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு
தேசிய செய்திகள்

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு

தினத்தந்தி
|
9 Aug 2024 4:12 PM IST

தி.மு.க., காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் உள்ளனர்.

புதுடெல்லி,

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆணை பிறப்பித்துள்ளார்.

பாஜகவின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் உள்ளனர்.

இந்த கூட்டுக்குழுவானது, மசோதா குறித்து ஆய்வு செய்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

மேலும் செய்திகள்