< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 குண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 குண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

தினத்தந்தி
|
30 Oct 2024 4:33 AM IST

இருசக்கர வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 10 கையெறி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பு ல்வாமா நகரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டேனிஷ் பஷீர் என்ற நபரை தடுத்து நிறுத்தி, அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அந்த வாகனத்தின் இருக்கைக்கு அடியில் 10 கையெறி குண்டுகள் மற்றும் 5 பேட்டரிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையின் மூலம் புல்வாமாவில் நடைபெற இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்