< Back
தேசிய செய்திகள்
வெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
தேசிய செய்திகள்

வெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்

தினத்தந்தி
|
5 Dec 2024 7:05 PM IST

நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

பெஞ்சல் புயலால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு, அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன. புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்