< Back
தேசிய செய்திகள்
கனமழை: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானம் கொச்சியில் தரையிறக்கம்
தேசிய செய்திகள்

கனமழை: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானம் கொச்சியில் தரையிறக்கம்

தினத்தந்தி
|
25 Oct 2024 5:05 AM IST

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானம் கனமழை காரணமாக கொச்சியில் தரையிறங்கியது

திருவனந்தபுரம்,

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது கனமழை பெய்துகொண்டிருந்தது.

இதனால், விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் வானிலை சீரானதும் நள்ளிரவு மீண்டும் கொச்சியில் இருந்து விமானம் திருச்சிக்கு புறப்பட்டது.

மேலும் செய்திகள்