< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் பலி
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் பலி

தினத்தந்தி
|
25 Dec 2024 4:31 PM IST

ராஜஸ்தானில் பஸ் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் உள்ள கைலா தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு கங்காபூர் நகரை நோக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் கராவ்லி மாவட்டத்தில் உள்ள குட்கான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்பூர்-குட்கான் சாலையில் சென்றபோது முன்னே சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயிரிழந்தவர்கள் நயன் தேஷ்முக் (60), அவரது சகோதரி பிரீத்தி பட் (60), அவரது மகன் குஷ் தேஷ்முக் (22), அவரது மகள் மானஸ்வி (25) மற்றும் உறவினர் அனிதா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்