தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
|தீ விபத்தினால் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை 6 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சமையலறையில் இருந்து கேஸ் சிலிண்டரும் சேர்ந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீ பற்றியதையடுத்து குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பின் 3-வது தளத்தில் சமையலறையில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடியிருப்பு வாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தினால் வீட்டில் இருந்த பணம், உடைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் என சுமார் 1 கோடி ரூபாய் வரை பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.