சிறையில் இருந்தபடி சுயேச்சையாக போட்டியிட்ட அம்ரித் பால் சிங் முன்னிலை
|அம்ரித்பால் சிங் பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்
அமிர்தசரஸ்,
"பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் தே' கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் காலை 11 மணி நிலவரப்படி, 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அம்ரித்பால் சிங் பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..பஞ்சாபின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங் ஸீராவும், பாஜக வேட்பாளர் மஞ்சித் சிங் மன்னாவும், ஆம் ஆத்மி வேட்பாளர் லால்ஜித் சிங் புல்லாரும், அகாலி தளம் வேட்பாளர் வீர்ஸா சிங் வால்டோஹா ஆகியோர் பின்னிலையில் உள்ளனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், கடந்த ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங் சிறையிலடைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது..பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகளை உள்ள்டக்கிய பஞ்சாபில் காலை 11 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3, சிரோன்மனி அகாலி தளம் 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்