< Back
தேசிய செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மாமா, சகோதரன் - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மாமா, சகோதரன் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
24 Jun 2024 1:50 PM IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் குட் டச், பேட் டச் பயிற்சியின் போது அப்பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அப்போது அந்த சிறுமி தனது தந்தை, ஒன்றுவிட்ட சகோதரன் மற்றும் மாமாவால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

"கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி அவரது ஒன்றுவிட்ட சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது மாமா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியின் தந்தையும் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் கூறினார்." என்றார்.

மேலும் செய்திகள்