< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.
|17 Nov 2024 6:21 PM IST
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் கிராரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அனில் ஜா. இவர் இன்று பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் அனில் ஜா அக்கட்சியின் இணைந்தார். பா.ஜ.க. தலைமை மற்றும் கொள்கைகளில் நம்பிக்கையில்லை என கூறி அனில் ஜா ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரியுமான கைலாஷ் கெலாட் அக்கட்சியில் இருந்து இன்று விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.