'2029-ல்...' மோடி பற்றி அமித்ஷா வெளியிட்ட கணிப்பு
|2029-ம் ஆண்டிலும் 'இந்தியா' கூட்டணி எதிர்க்கட்சியாகவே இருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சியாகவே இருக்க 'இந்தியா' கூட்டணி தயாராகிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் என்ன செய்தாலும் சரி, 2029-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும், மோடி மீண்டும் வருவார்.
காங்கிரஸ் கட்சி 3 தேர்தல்களில் பெற்ற இடங்களை விட பா.ஜ.க. நடப்பாண்டு தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அரசு நிலையற்றது என சிலர் கூறி வருகின்றனர். அவர்களிடம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்கள் அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்வது மட்டுமின்றி, அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
2029-ம் ஆண்டிலும் 'இந்தியா' கூட்டணி எதிர்க்கட்சிதான். அவர்கள் எதிர்க்கட்சியின் வேலையை சரியாக செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.