< Back
தேசிய செய்திகள்
கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது:  டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை
தேசிய செய்திகள்

"கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது": டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை

தினத்தந்தி
|
21 Feb 2025 7:55 PM IST

பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை கடவுளே நினைத்தால்கூட ஒரே இரவில் தீர்க்க முடியாது டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவக்குமார் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டிகே சிவக்குமார் கூறுகையில், "பெங்களூருவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாற்ற முடியாது.கடவுளால் கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் மூலம் செயல்கள் நடைபெற்றால் மட்டுமே பிரச்சினைகளை சரி செய்ய முடியும் " என்று கூறியுள்ளார்

அவரது இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பொருளாதார நிபுணரும், ஆரின் கேபிடல் நிறுவனத்தின் தலைவருமான மோகன்தாஸ் பாய், "டி.கேசிவகுமார், நீங்கள் எங்கள் அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன! ஒரு வலிமையான அமைச்சராக உங்களை நாங்கள் பாராட்டி வரவேற்றோம்.

டிகே சிவக்குமாரின் கருத்து தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பொருளாதார நிபுணரும், ஆரின் கேபிடல் நிறுவனத்தின் தலைவருமான மோகன்தாஸ் பாய், "டி.கேசிவகுமார், நீங்கள் எங்கள் அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன! ஒரு வலிமையான அமைச்சராக உங்களை நாங்கள் பாராட்டி வரவேற்றோம். நல்ல நடைபாதைகளுடன் கூடிய சுத்தமான பெங்களூருவை ஏன் விரைவாக உறுதி செய்ய முடியாது? " என்று கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் சிவகுமாரின் கருத்தை விமர்சித்ததுடன், சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசை திறமையற்றது என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்