< Back
தேசிய செய்திகள்
7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
தேசிய செய்திகள்

7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

தினத்தந்தி
|
26 Oct 2024 12:43 AM IST

என்ஜினீயர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொகபேட்டை பகுதியில் வசித்தவர் கானிவடா நாக பிரபாகர் (வயது27). மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றிய அவர், அங்குள்ள பல மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். நேற்று காலையில் அவர், தான் தங்கியிருந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து திடீரென குதித்துவிட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்