< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
8 Nov 2024 12:05 PM IST

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையின் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்