< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
5 Jan 2025 7:35 PM IST

சத்தீஷ்காரில் நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ராய்ப்பூர்,

இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று வரை, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த மோதலில் நக்சலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 4 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்