< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: 2 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை
|8 Nov 2024 10:37 PM IST
சத்தீஷ்காரில் பல மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டைக்கு பின்னர் 2 மாவோயிஸ்டுகளின் உடல்களை போலீசார் மீட்டனர்.
பிஜாப்பூர்,
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் பஸ்தார் பிரிவில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என தகவல் கிடைத்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், ரேகாபள்ளி-கோமத்பள்ளி வன பகுதியில் இன்று காலை 11 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதல் பல மணிநேரம் நீடித்தது. இதன்பின்னர் 2 மாவோயிஸ்டுகளின் உடல்களை போலீசார் மீட்டனர். இதுதவிர துப்பாக்கி, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த என்கவுன்டரில் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.