< Back
தேசிய செய்திகள்
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

தினத்தந்தி
|
17 Nov 2024 6:37 AM IST

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதாக பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் கமிஷனில் பரஸ்பரம் புகார் அளித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மற்றும் மராட்டிய மாநில தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் கமிஷனில் பரஸ்பரம் புகார் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளது.

இரு கட்சி தலைவர்களும் நாளை (திங்கட்கிழமை) மதியம் 1 மணிக்குள் புகார்கள் தொடர்பாக முறையான பதில்களை வழங்கும்படி அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்