< Back
தேசிய செய்திகள்
டெல்லிக்கு வழங்கும் தண்ணிரில் அமோனியா அதிகரிப்பு.. அரியானாவிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
தேசிய செய்திகள்

டெல்லிக்கு வழங்கும் தண்ணிரில் அமோனியா அதிகரிப்பு.. அரியானாவிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

தினத்தந்தி
|
27 Jan 2025 6:12 PM IST

யமுனை நதி நீர் மாசுபாடு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினர்.

புதுடெல்லி:

யமுனை நதி நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு பா.ஜ.க. தலைமையிலான அரியானா அரசுதான் காரணம் என்றும் டெல்லி அரசு குற்றம்சாட்டுகிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் பூதமாகரமாக கிளம்பி உள்ளது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக ஆற்றில் அம்மோனியா அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் வஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் கூறி உள்ளனர்.

இந்த கடிதத்தை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், நாளை மதியத்துக்குள் விளக்க அறிக்கை (உண்மை அறிக்கை) தாக்கல் செய்யும்படி அரியானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

மேலும் செய்திகள்