< Back
தேசிய செய்திகள்
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
தேசிய செய்திகள்

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

தினத்தந்தி
|
21 Dec 2024 6:17 AM IST

சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

காத்மாண்டு,

நேபாளத்தில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) உறுதி செய்துள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கைகளின்படி, நில அதிர்வு நிகழ்வு இந்திய நேரப்படி (IST) துல்லியமாக அதிகாலை 3:59 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அட்சரேகை 29.17 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.59 டிகிரி கிழக்கு என்று அடையாளம் காணப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்