மணிப்பூரில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
|மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தமெங்லாங்,
மணிப்பூரின் தமெங்லாங் பகுதியில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
20 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 24.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.