< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்
மாநில செய்திகள்

குடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்

தினத்தந்தி
|
19 Jun 2024 10:20 PM GMT

போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் அனல்மின்நிலைய ஊழியர் ஒருவர் படுத்திருந்தார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம், பூசாரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சங்கர் (வயது 30). இவர் மேட்டூர் அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர், எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் கள்ளுக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்துள்ளார். அங்கு அவர் மது குடித்த நிலையில், போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் படுத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று சாலையில் படுத்து கிடந்த சங்கரின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்