< Back
தேசிய செய்திகள்
அசாமில் ரூ.5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
தேசிய செய்திகள்

அசாமில் ரூ.5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

தினத்தந்தி
|
19 Oct 2024 8:46 AM IST

அசாமில் ரூ.5.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திஸ்பூர்,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சந்த்மாரி மேம்பாலத்திற்கு அருகே, சந்தீப் சிங்(37) மற்றும் மனோஜ் தேகா(37) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் போதைப்பொருள் கொண்டு சென்றதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான 691 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்