< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
|28 Dec 2024 11:39 AM IST
அசாமில் ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனம் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் வாகனத்தின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 532.46 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தின் டிரைவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.3.5 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அசாம் காவல்துறையினரை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.