< Back
தேசிய செய்திகள்
நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
தேசிய செய்திகள்

நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

தினத்தந்தி
|
6 Dec 2024 11:28 AM IST

நாகாலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.

கோஹிமா,

நாகாலாந்தின் திமாபூர் முனிசிபல் கவுன்சில் குப்பை கிடங்கில் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவால் கைப்பற்றப்பட்ட ரூ.34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் இன்று தீயிலிட்டு அழித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் ஹெராயின், கிரிஸ்டல் மெத் மற்றும் பிரவுன் சுகர் ஆகியவை அடங்கும். மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த அழிவு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்