< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது
|13 Nov 2024 5:22 PM IST
அசாமில் ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுகாத்தி போலீசார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 5 சோப்பு பெட்டிகளில் 11 கிராம் ஹெராயின் மற்றும் 10 ஆயிரம் யாபா மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்கள் நகரின் ஹடிகான் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.3.08 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 40 வயது பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 மொபைல் போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.